2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நாய் – நரி கலப்பினம் கண்டுபிடிப்பு

Freelancer   / 2023 செப்டெம்பர் 21 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேசிலின் ரியோ கிராண்டே பகுதியில் நரி போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் ​ஒன்று காயம் அடைந்திருந்த நிலையில் மீட்கப்பட்டது. அந்த உயிரினம் குறித்து உயிரியல் வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். பார்ப்பதற்கு நாய் அல்லது நரி போன்ற தோற்றம் கொண்ட இந்த விலங்குக்கு நாய் வழக்கமாக உண்ணும் உணவு பொருட்களை பராமரிப்பாளர்கள் கொடுத்தனர்.

ஆனால் இந்த உயிரினம் குட்டி எலிகளை விருப்பத்துடன் சாப்பிட்டு வந்தது. அதன் கண்கள் வீட்டு நாயை போன்றும், காதுகள் நீண்டு நரியைப் போன்றும் தோற்றம் அளித்தது. மேலும் இந்த விலங்கு நாயைப் போன்று குரைத்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த உயிரினம் நாய் – நரி இணைந்த கலப்பினம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கலப்பினத்தில் கண்டறியப்பட்ட முதல் உயிரினம் இதுதான் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .