2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

நால்வரைக் கொன்ற ஒருவர் டெக்ஸாஸில் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில், நான்கு பெண்களைக் கொன்றதோடு, ஐந்தாவது பெண்ணைக் கடத்திய குற்றச்சாட்டில், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர், ஐ.அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் பிரிவில், 10 ஆண்டுகள் பணியாற்றியவர் என்று அறிவிக்கப்படுகிறது.

இக்கொலைகளை இவர், கடந்த இரண்டு வாரங்களில் மேற்கொண்டுள்ளார் என, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவரால் ஐந்தாவதாகக் கடத்தப்பட்ட பெண், அவரிடமிருந்து தப்பி, பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதைத் தொடர்ந்தே, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X