Freelancer / 2024 செப்டெம்பர் 10 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், தனது கீமோதெரபி சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக சந்தோஷமாக தெரிவித்தார்.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மகன் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன், புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவர் தனது கீமோதெரபி சிகிச்சையை முடித்துவிட்டதாகவும், இந்த ஆண்டு முழுவதும் பொது பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்து காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
இளவரசி கேட் கூறுகையில், “கடந்த ஒன்பது மாதங்கள் ஒரு குடும்பமாக எங்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருந்தது. கோடைக்காலம் முடிவடையும் நிலையில் இறுதியாக எனது கீமோதெரபி சிகிச்சையை முடித்ததில் நிம்மதி கிடைத்துவிட்டது.
எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கிடைத்த ஆதரவிற்கு நன்றி. புற்றுநோய் பயணம் சிக்கலானது, பயமுறுத்தும் மற்றும் கணிக்க முடியாதது. நான் மீண்டும் வேலைக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன், மேலும் வரும் மாதங்களில் என்னால் முடிந்தால் இன்னும் சில பொது பணிகளை மேற்கொள்வதற்காக காத்திருக்கிறேன். இந்த நேரத்தில் எங்களுக்கு உதவி செய்யும் அனைவரிடமிருந்தும் பெரும் பலத்தைப் பெற்றுள்ளோம்” என்று கூறியுள்ளார்.S
11 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
1 hours ago