Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 ஜூலை 24 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் நுளம்பின் DNA வை வைத்து திருடனை பொலிஸார் கண்டுபிடித்த சம்பவமானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் புஜியான் மாகாணத்தில் புஜோ எனும் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் பூட்டிகிடந்த வீட்டுக்குள் இருந்த பல பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் திருட்டு நடந்த வீட்டில் சோதனை மேற்கொண்ட போது வீட்டின் சுவற்றில் நுளம்பின் இரத்தக் கறை படிந்து இருந்ததையும், அதனருகே இரண்டு நுளம்புகள் இறந்துள்ளதையும் பார்வையிட்டுள்ளனர்.
இதனிடையில் புதியதாக வர்ணம் பூசப்பட்ட வீடு என்று வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தன்னை கடித்த நுளம்பை திருடன் சுவற்றுடன் நசுக்கி இருக்கலாம் என பொலிஸார் கருதினர்.
இதனால் நுளம்பு நசுக்கப்பட்டிருந்த சுவற்றில் படிந்துஇருந்த இரத்தக் கறை தடயவியல் ஆதாரமாக எடுக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இவ் ஆய்வில் கிடைத்த டிஎன்ஏ முடிவை அப்பகுதியில் குற்றபின்னணி கொண்ட திருடர்களின் டிஎன்ஏ விபரங்களுடன் காவல்துறையினர் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது குற்ற பின்னணிகொண்ட சாய் என்ற பெயர் கொண்ட நபரின் இரத்தத்தின் டிஎன்ஏவும், திருட்டு நடந்த வீட்டில் இருந்த இரத்தக்கறையின் டிஎன்ஏவும் பொருந்தியது.
அதன்பின் சாய் அந்த வீட்டில் நுழைந்து திருடியதை காவல்துறையினர் உறுதிசெய்து அவரைக் கைது செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .