Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 நவம்பர் 20 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில், வாகன நிறுத்துமிடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஹொலிவுட் நடிகை டென்னிஸ் ரிச்சர்ட்ஸ் (Denise Richards) நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
திரைப்பட ஸ்டூடியோ-வின் வாகன நிறுத்துமிடத்தில் தங்கள் பிக்கப் டிரக்கை நிறுத்த டென்னிஸ் ரிச்சர்ட்ஸும், அவரது கணவரும் இடம் தேடிக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த காரில் இருந்த நபர் ஆத்திரம் அடைந்து அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்குவாதம் முற்றிய நிலையில் குறித்த நபர் அவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிக்கப் டிரக்கின் பின்புறத்தில் குண்டு துளைத்ததால் அதிர்ச்சி அடைந்த டென்னிஸ் ரிச்சர்ட்ஸ், அங்கிருந்து அழுதவாறே படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
2 hours ago