Editorial / 2019 ஜூலை 02 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக நாடுகளுடனான தனது 2015ஆம் ஆண்டு அணு ஒப்பந்தத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டதையும் விட அதிகமான தாழ் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கொண்டுள்ளதாக நேற்று முன்தினம் ஈரான் அறிவித்த நிலையில், நெருப்புடன் ஈரான் விளையாடுவதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஓராண்டுக்கு முன்னர் குறித்த அணு ஒப்பந்தத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கா விலகிய பின்னர் அந்த அணு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைத் தாண்டி ஈரான் சென்ற முதலாவது சந்தர்ப்பமாக ஈரானின் மேற்குறித்த அறிவிப்பு நோக்கப்படுகையில், குறித்த நகர்வானது ஒப்பந்த மீறலொன்றில்லை எனத் தெரிவித்துள்ள ஈரானின் வெளிநாட்டமைச்சர் மொஹமட் ஜவாட் ஸரிஃப், ஐக்கிய அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகியமைக்கு பதிலளிப்பதற்கான உரிமை ஈரானுக்கு இருக்கின்றது என வாதிட்டிருந்தார்.
எவ்வாறெனினும், ஐக்கிய அமெரிக்காவையும், ஈரானையும் மோதல்போக்கு நிலைமையிலிருந்து பின்னநகர்த்த ஐரோப்பிய நாடுகள் முயலுகையில் குறித்த நகர்வானது நிலைமைகளை சிக்கலாக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், அணு ஒப்பந்தத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவான 300 கிலோ கிராமை விட ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பானது அதிகமாக உள்ளதாக ஈரானின் அரை உத்தியோகபூர்வ ஃபார்ஸ் செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அணு ஒப்பந்தத்தின் கீழ் ஈரானின் அணுத் திட்டத்தை கண்காணிக்கும் ஒஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பகமான சர்வதேச அணு சக்தி முகவரகமானது, அணு ஒப்பந்தத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட 300 கிலோ கிராம் செறிவூட்டப்பட்ட யுரேனிய அளவை ஈரான் தாண்டியுள்ளது எனக் கூறியுள்ளது.
18 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 minute ago