Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேபாளத்தில் பெய்து வரும் பருவகால மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை முதல் அங்கு பருவகால மழை தீவிரம் அடைந்து 28 மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.
தாழ்வான பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து மின்சாரம் தடைபட்டுள்ளது.
பிராதான நெடுஞ்சாலைகளில் போக்குவதத்து துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நேபாள பொலிஸ் மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதுடன், 38 பேர் காயமடைந்திருப்பதாகவும், 30 பேரைக் காணவில்லை என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் 22 மாவட்டங்களில் இருந்து இதுவரை 1146 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், கடந்த மூன்று நாட்களில் மட்டும் 33 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
57 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago