Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 செப்டெம்பர் 15 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நைஜீரியா நாட்டில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏற்றி சென்ற மரப்படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 64 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வடமேற்கு நைஜீரியாவில் ஜம்பாரா மாநில விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்காக தினந்தோறும் ஆற்றினை கடந்து செல்ல வேண்டும். அந்த வகையில் 70 பேர் படகில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் விவசாயிகள் 64 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மீட்புப் படை அதிகாரியொருவர் கூறுகையில், “70 விவசாயிகளை ஏற்றிச் சென்ற மரப் படகு ஒன்று, கும்மி நகருக்கு அருகில் உள்ள அவர்களது விவசாய நிலங்களுக்குச் செல்லும் போது விபத்தில் சிக்கியது. மீட்பு பணிகளுக்கு உள்ளூர் மக்கள் உதவினர்.
3 மணி நேரமாக போராடி 6 பேரை தான் மீட்க முடிந்தது. 900க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை அணுகுவதற்கு தினமும் ஆற்றைக் கடந்து தான் ஆக வேண்டும். இரண்டு படகுகள் மட்டுமே இருக்கின்றன. இது பெரும்பாலும் கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கிறது” என்று கூறினார்.S
10 minute ago
23 minute ago
34 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
23 minute ago
34 minute ago
50 minute ago