Editorial / 2018 ஜூன் 28 , பி.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய நைஜீரியாவின் பிளட்டோ மாநிலத்தில், கடந்த வாரயிறுதியில் இடம்பெற்ற வன்முறைகளில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பிளட்டோ மாநில ஆளுநர் சிமோன் லலோன் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார். முன்னர், 86 பேரே கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரியுடன் இணைந்து பங்குபற்றிய செய்தியாளர் மாநாட்டிலேயே சிமோன் லலோன் மேற்படி தகவலை வெளிப்படுத்தியிருந்தார்.
பெரும்பாலும் முஸ்லிம்களான புலனி இனக் குழுமத்தைச் சேர்ந்த மேய்ச்சல்காரர்களாலும் ஏனைய இனக் குழுமங்களைச் சேர்ந்த கிறிஸ்தவ விவசாயிகளாலுமே கடந்த வாரயிறுதியில் இடம்பெற்றது போன்ற வன்முறைகள் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிளட்டோ மாநிலத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி புஹாரி, வன்முறை அதிகாரிப்புத் தொடர்பாக நாடாளுமன்றத்தின் கீழ், மேல் சபைகளுடன் கலந்துரையாடியிருந்தார்.
அந்தவகையில், கருத்துத் தெரிவித்த கீழ் சபையான பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் யகுபு டொகரா, பிளட்டோவுக்கு விஜயம் செய்தபோது தான் முதலில் என்ன கண்டார் என்பதை மீண்டும் வன்முறை நடக்காமல் இருப்பதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புஹாரி விளக்கமளித்ததாகக் கூறினார்.
பாதுகாப்பை மேம்படுத்துவதாகக் கூறிக்கொண்டு 2015ஆம் ஆண்டு ஓய்வபெற்ற ஜெனரலான புஹாரி ஆட்சிக்கு வந்த நிலையில், பெரும்பாலும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதான கோரிக்கைகளை புஹாரியிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்மாத ஆரம்பத்தில் முன்வைத்திருந்தனர்.
இவ்வாண்டு ஆரம்பத்திலிருந்து சமூக வன்முறைகள் உயர்ந்திருந்த நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். அடுத்தாண்டு பெப்ரவரியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தனது இரண்டாவது பதவிக் காலத்துக்காக போட்டியிடும் திட்டங்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கும் ஜனாதிபதி முஹம்மது புஹாரியின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு குறைபாடும் பிரதான அரசியல் பிரச்சினையொன்றாக மாறியுள்ளன.
இந்நிலையில், மின்னஞ்சல் மூலமாக அறிக்கையொன்றை நேற்று முன்தினமிரவு வெளியிட்ட நைஜீரிய பொலிஸ் படை, பிளட்டோ மாநில பாதுகாப்பை அதிகரிப்பதற்காக, பொலிஸ் கண்காணிப்பு ஹெலிக்கொப்டர்கள் இரண்டு, கவச வாகனங்கள் ஐந்து, ஏனைய மாநிலங்களில்ருந்தான மேலதிக அதிகாரிகள் உள்ளிட்ட சிறப்புப் படையொன்றை அனுப்புவதாகக் கூறியுள்ளது.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025