Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 22 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை 8 குண்டுகளை வீசித் தாக்கியதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.
இன்று (22) அதிகாலை 2 மணியளவில் பஷ்துன் மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாட்ரே தாரா கிராமத்தில், பாகிஸ்தான் விமானப்படை ஜேஎஃப்-17 போர் விமானங்கள் எல்எஸ்-6 வகையைச் சேர்ந்த 8 குண்டுகளை வீசித் தாக்கின. இந்த தாக்குதலால் கிராமத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டது, இதில் பலர் காயமடைந்தனர். பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.
விமானப்படை அப்பகுதியில் உள்ள தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) மறைவிடங்களை குறிவைத்து தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்தத் தாக்குதலில் உயிரிழந்த அனைவரும் பொதுமக்கள் ஆவர்.
சமீபத்திய நாட்களில், ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உளவுத்துறை அடிப்படையிலான தேடுதல் நடவடிக்கையின் போது ஏழு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவித்தது.
செப்டம்பர் 13-14 அன்று, கைபர் பக்துன்வாவில் நடந்த இரண்டு தனித்தனி மோதல்களில் 31 தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .