Freelancer / 2024 செப்டெம்பர் 25 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் அரசின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முழு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தார்.
அமெரிக்கா, நியூயோர்க்கில் ஐ.நா., பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்தபோது பங்களாதேஷ் அரசின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ், ஜனாதிபதி ஜோ பைடன் ஆகிய இருவரும் சந்தித்து பேசினர்.
மாணவர்கள் முந்தைய அரசின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும், பங்களாதேஷை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை உருவாக்கவும் போராடியது பற்றி பைடனிடம் முகமது விளக்கினார்.
அப்போது, “மாணவர்கள் தங்கள் நாட்டிற்காக இவ்வளவு தியாகம் செய்ய முடிந்தால், அவர்களுக்கு இன்னும் அதிகமாக செய்ய வேண்டும். பங்களாதேஷ் இடைக்கால அரசிற்கு அமெரிக்கா முழு ஆதரவு வழங்கும்” என பைடன் உறுதி அளித்தார்.
பங்களாதேஷில் நிலவும் வன்முறையில் அமெரிக்கா தலையீடு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவே கடந்த காலத்தில் அமெரிக்க தலையீடு பற்றி சுட்டிக்காட்டினார்.
இந்த கூற்றுக்களை வெள்ளை மாளிகை நிராகரித்தது. பங்களாதேஷில் நிலவும் சூழல்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.S
9 hours ago
9 hours ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
10 Nov 2025