Editorial / 2019 ஜூன் 27 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசுக்களை பாதுகாக்கின்றோம் எனும் போர்வையில், அப்பாவி மக்களைத் தாக்கி, வன்முறையில் ஈடுபடும் பசு குண்டர்களுக்கு, 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கும் சட்டத் திருத்தத்தை, மத்தியப் பிரதேச அரசாங்கம் கொண்டு வரவுள்ளது.
இதன் பிரகாரம், பசுவதைத் தடுப்புச் சட்டம் 2004இல், திருத்தம் கொண்டு வருவதற்கு, மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ், ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான கோப்புகளில், முதலமைச்சர் கமல்நாத், கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், பசுக்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில், பல அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம், பல இடம்பெற்று வரும் நிலையிலேயே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாவட்டம் தோறும் சிறப்பு பொிலஸ் அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க, உச்ச நீதிமன்றம், அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஜுலை மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மழைக்கால சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில், இந்தத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று தெரியவருகின்றது.
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago