Editorial / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது படத்தை ஓட வைக்க நடிகர் விஜய் பரபரப்பாக பேசுகிறார் எனத் தெரிவித்துள்ள இந்தியாவின் தமிழ்நாடு மாநில அமைச்சர் ஜெயக்குமார், விஜய் மட்டுமல்ல கவுண்டமணி, செந்தில் கூட கட்சி ஆரம்பிக்கட்டும் எனக் கூறியுள்ளார்.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், தமிழ்நாடு அரசாங்கத்தை மறைமுகமாக விமர்சித்தார். அவர் பேசும்போது, “யாரை எங்கே உட்கார வைக்கணுமோ அங்க உட்கார வைக்கணும். பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் பேனரை வைத்தவரை கைது செய்யாமல் அச்சவடித்தவரையும் லொறி ஓட்டுநரையும் கைது செய்துள்ளனர்'' என்றார். இதற்கு தமிழ்நாடு மாநில அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பொருட்கள் சேவைகள் வரிக் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய ஜெயக்குமாரிடம் விஜய் பேசியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோதே மேற்குறிப்பிட்டவாறு அதற்கு பதிலளித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க) பழுத்த மரம் என்பதால் தான் கல்லடி படுகிறது. அ.இ.அ.தி.மு.கவை தொட்டால் தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள். தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பதே வரலாறு. படத்தை ஓட வைக்க வேண்டும் என்பதற்காக எங்கள் மீது விமர்சனங்கள் வைக்கிறார்கள். விஜய் மட்டுமல்ல கவுண்டமணி, செந்தில், விவேக் கூட கட்சி ஆரம்பிக்கட்டும். ஆனால் மக்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.
விஜய்யின் படங்கள் வெளிவரும்போதெல்லாம் சர்ச்சைகளும் சேர்ந்தே வரும். தலைவா, கத்தி, மெர்சல், சர்க்கார் போன்ற படங்கள் வெளிவருவதற்கு முன்பு இது தான் நடந்தது. பிரச்சினை ஏற்பட்ட பின், அரசாங்கத்துடன் அவர் சமாதானமாக போய் படத்தையும் வெளியிட்டு விடுவார். இது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலம் முதல் நடந்து வருகிறது. இப்போதும் அது மாதிரியே செய்கிறார் என்று அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் சிலர் விமர்சிக்கின்றனர்” என்று கூறினார்.
6 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
29 minute ago