2025 நவம்பர் 05, புதன்கிழமை

பதவி துறப்பதிலிருந்து ’பின்வாங்கிவிட்டார் ராகுல்’

Editorial   / 2019 மே 27 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்ட கருத்து காரணமாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தனது பதவியை துறப்பதிலிருந்து பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமேதியில் காங்கிரஸ் தோல்வியடைந்தமைக்கான பொறுப்பை ஏற்றுகொண்ட ராகுல் காந்தி, கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். ஆனால், கட்சி நிர்வாகம் இவ்விடயத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே ப.சிதம்பரம், “ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் தென்னிந்தியாவிலுள்ள தொண்டர்கள் அனைவரும் தற்கொலை முடிவுக்கு செல்வார்கள்” என கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்தே ராகுல் காந்தி, தனது பதவி விலகல் விடயத்திலிருந்து பின்வாங்கியுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை வயநாடு தொகுதியில் மக்கள் உங்களுக்கு சாதனை வெற்றியை தந்துள்ளனர். ஆகவே கட்சி தலைவராக தொடர்ந்து பணியாற்ற வேண்டுமென காங்கிரஸின் ஏனைய மூத்த தலைவர்கள் ராகுல் காந்திக்கு வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X