2025 நவம்பர் 05, புதன்கிழமை

பயங்கரவாதக் குற்றச்சாட்டு: 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Editorial   / 2019 ஏப்ரல் 25 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்படட 37 பேருக்கு, சவுதி அரேபியாவில், நேற்று முனதினம் (23), மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

இஸ்லாமிய ஷரியத் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றும் நாடான சவுதி அரேபியாவில், பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பல்வேறு செயற்களில் ஈடுபட்டார்கள் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட சவுதி அரேபியாவைச் சேர்ந்த 37 பேருக்கு, நேற்று முனத்தினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பைச் சீர்குலைப்பது, குழப்பங்களை விளைவிப்பது போன்ற பயங்கரவாதச் செயற்பாடுகளில், மறைமுகமாகச் செயற்படும் பயங்கரவாதக் குழுக்களை, இவர்கள் உருவாக்கி வந்தமை தொடர்பாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட புலன் விசாரணைகளின் பின்னரே, இவர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது என்று, சவுதி அரேபிய நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X