Editorial / 2019 மே 08 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவை முழுமையாக கண்காணிப்பதற்கும் எல்லை தாண்டி வரும் பயங்கரவாதிகளை உடனுக்குடன் கண்டிபிடிக்கும் வகையிலும் அதிநவீன றேடார் செய்மதியை விண்ணில் செலுத்தவுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த செயற்கைகோள், எதிர்வரும் 22ஆம் திகதி, ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ரிசாட்-2 பி.ஆர்.1 எனப் பெயரிட்டுள்ள இச்செய்மதியில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு ஒரே இடத்தை 3 தடவை ஒளிப்படம் எடுக்கும் ஆற்றல் கொண்ட கருவி பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் எல்லை தாண்டி வரும் பயங்கரவாதிகள், கடல் வழியாக பயங்கரவாதிகள் உள்நுழைவதை தடுக்கவும் குறித்த செயற்கைகோள் உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலத்தை ஏவுவதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago