2025 நவம்பர் 05, புதன்கிழமை

பயணிகள் பஸ் பள்ளத்தில் பாய்ந்ததில் 29 பேர் பலி

Editorial   / 2019 ஜூலை 08 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி, ஆக்ரா அருகில் பயணித்த பஸ்ஸொன்று, 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (08) இடம்பெற்ற இந்த விபத்தில், படுகாயமடைந்த நிலையில், 16க்கும் மேற்பட்டோர், வைத்தியசா​லையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

40 பயணிகளுடன், லக்னோவிலிருந்து டெல்லிக்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த பஸ், யமுனா அதிவேக நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், நீரில் மூழ்கிய பேருந்தில் இருந்து, 27 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.

அதிகாலை 4.15க்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளமையால், பஸ் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தலா 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X