Editorial / 2026 ஜனவரி 22 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனடாவைச் சேர்ந்த ஓர் ஆடவர் விமானி, விமானச் சிப்பந்தி போல் ஆள்மாறாட்டம் செய்து நூற்றுக்கணக்கான முறை இலவசமாக விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்.
33 வயது டால்லாஸ் பொகோர்னிக் (Dallas Pokornik) கனடாவின் டொரோண்டோ நகரில் கைது செய்யப்பட்டார்.
2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பொகோர்னிக் டொரோண்டோவில் ஒரு விமான நிறுவனத்தில் விமானச் சிப்பந்தியாகப் பணியாற்றினார்.
பின்னர் அவர் பொய்யான ஊழியர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி 3 விமான நிறுவனங்களில் விமானிகளுக்கும் விமானச் சிப்பந்திகளுக்கும் ஒதுக்கி வைக்கப்படும் விமானச் சீட்டுகளைப் பெற்றதாக நம்பப்படுகிறது.
அவ்வாறு 4 ஆண்டுகளுக்கு பொகோர்னிக் ஏமாற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அவர் எந்த விமானங்களில் இலவசமாகச் சென்றார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. பொகோர்னிக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .