2025 நவம்பர் 26, புதன்கிழமை

பிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்தால் சர்ச்சை

Freelancer   / 2025 நவம்பர் 26 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதிலிருந்தே பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் இராணுவத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. 

பிரான்ஸும் அதேபோல இராணுவத்தை பலப்படுத்தவேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் விரும்புகிறார்.

சமீபத்தில் அவர் இராணுவத்தில் இளைஞர்கள் தானே முன்வந்து சேரும் திட்டம் குறித்து பேசியிருந்தார். 

அதைத் தொடர்ந்து, இராணுவ ஜெனரலான ஃபேபியன்  என்பவர், நம் நாடு ரஷ்ய போரில் ஈடுபடுவதற்காக நமது இளைஞர்களை உக்ரைனுக்கு அனுப்பினால் நாம் நம் பிள்ளைகளை இழக்க நேரிடும் என்று கூறியதால் பதற்றமான ஒரு சூழல் உருவானது. 

இந்நிலையில், தனது உரைக்கு விளக்கம் அளித்துள்ளார் மேக்ரான்.  இளைஞர்கள் இராணுவத்தில் சேருவது குறித்து தான் பேசிய விடயம் ரஷ்யப் போர் தொடர்பிலானதல்ல என்று கூறியுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X