Editorial / 2018 நவம்பர் 12 , மு.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

முதலாவது உலகப் போர் முடிவடைந்து, 100 ஆண்டுகள் நிறைவானதை நினைவுகூரும் வகையில், பிரான்ஸின் தலைநகர் பரிஸில், நேற்று (11), சிறப்பான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வுகளின் முதலாவது நாள் நிகழ்வு, நேற்று முன்தினம் (10) இடம்பெற்ற நிலையில், அங்கு சென்றுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐ.அமெரிக்க இராணுவ வீரர்களின் கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்துவதைத் தவிர்த்தார். பரிஸில், மழையான வானிலை நிலவியதன் காரணத்தாலேயே, அந்நிகழ்வை ஜனாதிபதி ட்ரம்ப் இரத்துச் செய்தார் என, ஐ.அமெரிக்க உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவித்தன.
ஆனால், அவரது காரணத்தை, நொண்டிச் சாட்டு என நிராகரித்த அவரது விமர்சகர்கள், உலக அரங்கில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டவராக ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளார் என்பதை இது காட்டுகிறது எனத் தெரிவிக்கின்றனர்.
பிரான்ஸுக்குச் சென்ற உடனேயே, அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கெதிராக, தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்திருந்த ஜனாதிபதி ட்ரம்ப், அதன் பின்னர் ஜனாதிபதி மக்ரோனைச் சந்தித்திருந்தாலும், முன்னைய சந்திப்புகளில் இருவருக்குமிடையில் காணப்பட்ட நெருக்கம் காணப்பட்டிருக்கவில்லை.
மாறாக, ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெலைச் சந்தித்த ஜனாதிபதி மக்ரோன், அவருடன் இணைந்து, நினைவு நிகழ்வுகளில் கலந்துகொண்டதோடு, இருவரும் அன்பை வெளிப்படுத்தும் வகையில், புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தனர்.
25 minute ago
40 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
40 minute ago
50 minute ago