Editorial / 2019 ஜூலை 14 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேபாளத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் பெய்து வரும் இடைவிடாத மழையால் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பருவகால மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 15 பேர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்ததுடன், 18 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்துள்ள நிலையிலேயே, கடந்த வியாழக்கிழமை முதல் பெய்து வரும் இடைவிடாத ம்ழையால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கிழக்கு இந்திய மாநிலமான பிஹாருக்குள் பாயும் கிழக்கு நேபாளத்திலுள்ள கொசி ஆறானது ஆபத்தான மட்டத்தைத் தாண்டியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அந்தவகையில், 2008ஆம் ஆண்டு ஆண்டு தனது கரையோரத்தை உடைத்து பல நிலங்களை வெள்ளமாக்கியதுடன், பிஹாரில் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்டோரை பாதித்தது முதல் இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் பிரச்சினையானதொன்றாக கொசி ஆறு காணப்படுகின்றது. இந்த அனர்த்தத்தில் 500 பேரளவில் இறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்திய-நேபாள எல்லையில் கொசி ஆற்றுடனுள்ள 56 வான்கதவுகளில் 30 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கிராமவாசிகளை வெளியேற்றுவதற்கு மீட்பு அணிகள் தரையிறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மக்களை அவதானத்துடன் இருக்கும்படியும் வானிலை அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் விவசாயத்துக்காக பருவகால மழையையே 30 மில்லியன் பேரைக் கொண்ட நேபாளம் நம்பியுள்ள நிலையில், பருவகால மழையானது வழமையாக ஜுன் மாதம் ஆரம்பித்து செப்டெம்பர் மாதம் வரை தொடருகின்றமை குறிப்பிட்டத்தக்கது. அந்தவகையில் அடிக்கடி வெள்ளங்கள், நிலச்சரிவுகள் ஏற்படுகின்ற நிலையில் ஒவ்வோராண்டும் பலர் கொல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago