Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2024 ஜூன் 03 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமானங்கள் நடுவானில் திடீரென குலுங்குவதற்கு, பருவநிலை மாறுபாடு பிரச்சினையும் ஒரு காரணமாக இருக்கலாம் என, நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமீப காலமாக, நடுவானில் விமானங்கள் திடீரென குலுங்கும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. கடந்த மாதம், லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற, சிங்கப்பூர் விமான நிறுவனத்தின் விமானம் இது போல் நடுவானில் குலுங்கியது. இதில், ஒரு பயணி உயிரிழந்தார். மேலும், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகமாக நடக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, சி.ஏ.டி., என்ற 'கிளியர் ஏர் டர்புலன்ஸ்’ எனப்படும் தெளிவான வானிலை கொந்தளிப்பு. அதாவது வானில் மேகமூட்டமாக இருப்பது, குறிப்பிட்ட பகுதியிலுள்ள சீதோஷ்ண நிலை உள்ளிட்டவற்றை கணித்தே, விமானங்கள் இயக்கப்படுகின்றன.
ஆனால், சி.ஏ.டி.,யில் இவ்வாறு எந்த அறிகுறியும், முன்னெச்சரிக்கையும் இருக்காது. வானம் தெளிவாக இருக்கும். ரேடார்களிலும் இது சிக்காது. வானில் வெப்பநிலை மாற்றம், பிற காரணிகளால், காற்றின் வேகம் அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம்.
இதுபோன்ற இயற்கையான நிகழ்வு ஏற்படும்போது, அந்தப் பகுதி வழியாகச் செல்லும் விமானங்கள் சிக்கினால், அது பெரிய அளவில் குலுங்கும். உயரத்தில் பறக்கும்போது, விமானத்தில் பயணிப்போர், பெல்ட் அணியத் தேவையில்லை. இது போன்ற நேரத்தில் விமானம் குலுங்கும்போது, பயணியருக்கு காயம் ஏற்படுகிறது.
இதுகுறித்து, பிரித்தானியாவின் கிழக்கு ஏங்கலியா பல்கலையின் பருவநிலைத் துறை பேராசிரியர் மனோஜ் ஜோஷி குறிப்பிடுகையில், “குறிப்பிட்ட உயரத்தில் அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் தான் சி.ஏ.டி., ஏற்படுகிறது. இதை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதால், சில நேரங்களில் பயணியருக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.
அதனால், எப்போதும் 'சீட் பெல்ட்” அணிந்திருப்பது பாதுகாப்பானதாகும். மேலும், சி.ஏ.டி., போன்ற சூழலின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பயிற்சி, விமானி மற்றும் விமானத்தில் உள்ள ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். பயணியரை எப்படி எச்சரிப்பது என்பதையும் கவனிக்க வேண்டும்.
இந்த சி.ஏ.டி., நீண்ட காலமாக இருந்தாலும், தற்போது அதிகளவில் நடக்கிறது. இதற்கு அதிகளவில் விமானங்கள் தற்போது பறப்பதால், அதிக எண்ணிக்கையில் இதை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் பருவநிலை மாறுபாடு பிரச்சினையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இதுகுறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
28 minute ago
30 minute ago
48 minute ago