2025 ஜூலை 19, சனிக்கிழமை

பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி

Editorial   / 2025 ஜூலை 15 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டைக் கட்டிப்பாரு, கல்யாணம் பண்ணிப்பாரு என்று கிராமத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள். ஏனென்றால் திருமணம் முடிப்பது என்பது சுலபமான காரியம் இல்லை என்பதால், இந்த பழமொழி வந்தது. திருமண நிகழ்வானது, ஜாதகப் பொருத்தத்தில் தொடங்கி, பெண் பார்த்தல், படிப்பு, அந்தஸ்து என பல்வேறு நிலைகளை கடந்து கடைசியில் திருமணம் என்ற பந்தத்தில் வந்து நிற்கும்.

வீட்டைக் கட்டிப்பாரு, கல்யாணம் பண்ணிப்பாரு என்று கிராமத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள். ஏனென்றால் திருமணம் முடிப்பது என்பது சுலபமான காரியம் இல்லை என்பதால், இந்த பழமொழி வந்தது. திருமண நிகழ்வானது, ஜாதகப் பொருத்தத்தில் தொடங்கி, பெண் பார்த்தல், படிப்பு, அந்தஸ்து என பல்வேறு நிலைகளை கடந்து கடைசியில் திருமணம் என்ற பந்தத்தில் வந்து நிற்கும்.

இவ்வாறு நடத்தப்படும் திருமணங்கள் ஒரு கூட்டு விழா போன்றது. பல்வேறு ஊர்களில் இருக்கும் சொந்தங்கள் அனைத்தையும் பத்திரிகை வைத்து அழைத்து அனைவரும் ஒருநாளில் ஒரே இடத்தில் கூடுவது என்பது பெண், மாப்பிள்ளை வீட்டாருக்கு மன மகிழ்ச்சியைத் தரும்.

ஒரு சிலர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆகாயத்தில் பறந்தவாறு திருமணம் செய்து கொள்வதும் என்பது வழக்கமாகிவிட்டது. சிலர் வெகு ஆடம்பரமாக திருமணங்களை நடத்துகின்றனர். இந்தநிலையில், விமான ஆர்வலரும் பிரபல இன்ப்ளூயன்சருமான சாம் சூய் விமானத்தில் திருமணம் செய்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

போயிங் 747 விமானத்தில் நடந்த இந்த திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவின் படி, திருமண உடையில் மணமக்கள் விமானம் ஏறும் இடத்திற்கு வருகின்றனர். அங்கு விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தில் மணமக்கள் இருவரும் கைகோர்த்தபடி நடந்து வந்தனர்.

அதன் பின்னர் விமானத்தில் ஏறிய மணமக்கள் உள்ளே தங்களது விருந்தினர்களுடன் திருமணத்தை கொண்டாடினர். விமானத்தின் உட்புறத்தில் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட ஒரு ஆடம்பர நட்சத்திர ஹோட்டலாக விமானம் மாறுபட்டிருப்பதை வீடியோவில் காண முடிகிறது.

விமானத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமக்கள் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொண்டு வானத்தில் தங்களது காதலை உறுதி செய்தனர்.

இதனை வீடியோவாக எடுத்து "காற்றில் காதல் உள்ளது" என்ற தலைப்புடன் பியோனா & சாம் என்ற ஜோடி சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்துள்ளனர். இந்த ஜோடி ஜூலை 12 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள புஜைரா சர்வதேச விமான நிலையத்திலிருந்துபுறப்பட்டதாக கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X