2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பலஸ்தீன பிரதமர் இராஜினாமா

Mithuna   / 2024 பெப்ரவரி 27 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், பலஸ்தீனத்தில் திடீர் திருப்பமாக அந்நாட்டு பிரதமர், பதவியை இராஜினாமா செய்வதாக முகமது ஷ்டய்யே அறிவித்ள்ளார்.

பலஸ்தீனத்தில் தனது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு புதிய அரசு பொறுப்பேற்க பிரதமர் முகமது ஷ்டய்யே விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாசிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், “காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக இந்த முடிவை எடுத்துள்ளேன். காசாவில் போர் முடிவுற்ற பின், அதற்குப் பிந்தைய சூழலில் பலஸ்தீனியத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X