Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 18 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேசியாவில் ஒரு சிறுமிக்குத் தெரியாமல் அவருடைய அந்தரங்க காட்சிகளைப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியான ஆல்வி ஹுசைன் முல்லா இணையத்தைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த தண்டனை போதாது என, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
"இந்த தண்டனை, குற்றவாளிக்கு எதிராக ஒரு நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், பாதிக்கப்பட்டவரின் வேதனைக்குத் தகுந்த தண்டனையாக இல்லை," என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில் இந்த குற்றம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தெரியாமல் அவருடைய வீடியோவை குற்றவாளி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக புதிய புகார் ஒன்றை காவல் துறையிடம் அளிக்கப்போவதாகவும், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதில் கோரிக்கை விடுக்கப்போவதாகவும் சிறுமியின் சகோதரர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago