Janu / 2026 மார்ச் 10 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) நாடு தழுவிய ரீதியில் கடுமையான எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (09) அன்று பாகிஸ்தான் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனைத் தெரிவித்தார். அரசாங்கச் செலவினங்களைக் குறைத்து, முழுமையான எரிபொருள் முடக்கத்தை தவிர்ப்பதே இந்த அதிரடி மாற்றங்களின் பிரதான இலக்கு என அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக பிரதமர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்புகள்:
ஈரான் போர் தீவிரமடைவதற்கு முன்னரே பாகிஸ்தானின் பொருளாதாரம் எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய போர்ச் சூழல் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
11 minute ago
33 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
33 minute ago
49 minute ago
1 hours ago