2025 மே 19, திங்கட்கிழமை

பாகிஸ்தானில் வரலாறு படைத்த இளம் பெண்

Ilango Bharathy   / 2022 ஜூலை 31 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களில், பெண்கள் உயர் பதவிகளில் இருப்பது என்பது மிகவும் அரிதான விடயமாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த மனிஷா ரோபேட்டா என்ற 26 வயதான இந்துப் பெண்ணொருவர்  அந்நாட்டு காவற்துறையில் டிஎஸ்பி ஆக பதவியேற்கவுள்ளார்.

இதன் மூலம் பாகிஸ்தான் காவல்துறையில் டிஎஸ்பி ஆகிய முதல் இந்துப்  பெண் என்ற வரலாறையும்  அவர் படைத்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத்  தெரிவித்த மனிஷா,” பெண் முன்னேறும் வழிகளை முன்னெடுத்து செல்ல விரும்புகிறேன் என்றும், காவல்துறையில் பாலின சமத்துவத்தையும் ஊக்குவிக்க முயல்வேன் ”என்றும் தெரிவித்துள்ளார்.

மனிஷா ஆரம்பத்தில் மருத்துவராக வேண்டும் என விரும்பியுள்ளார். அவரது உடன் பிறந்த சகோதரிகள் மூன்று பேரும் தற்போது மருத்துவராக உள்ள நிலையில், ஒரே ஒரு மதிப்பெண்ணில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வில் மனிஷா தோல்வி அடைந்துள்ளார்.
 இதன் பின்னர் சிந்த் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுக்காகத்  தயாராகி வந்த மனிஷா, அதில் தேர்ச்சி பெற்று 16ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

அதிகம் துன்புறுத்தலுக்கு ஆளாகப்படும் பெண்களுக்கு ஒரு பெண் பாதுகாப்பாளர் தான் தேவை என்பதை உணர்ந்து தான் காவல்துறையில்  சேர வேண்டும் என்றும் பின்னர் மனிஷா விரும்பி உள்ளார்.

அதே போல பாகிஸ்தான் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றத்தைத்  தட்டிக் கேட்டு, அவர்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த வழியைத்  தான் உருவாக்க விரும்வுவதாகவும் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X