Editorial / 2019 ஜூன் 12 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிகிஸ்தானில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, விமானத்தில் செல்லும்போது, பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்திக்கொள்ள, பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலக்கோட்டில் சென்று, பயங்கரவாத முகாம்களை அழித்து விட்டு வந்தச் சம்பவத்துக்குப் பின்னர், பாகிஸ்தான் அரசாங்கம், தனது வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்கு, கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி முதல் தடை விதித்திருந்தது.
இந்தியாவில் இருந்து, தெற்கு நோக்கி வரும் 11 வழித்தடங்களில் 2 வழித்தடங்களுக்கு மாத்திரமே, பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.
கடந்த மாதம் 22, 23ஆம் திகதிகளில், இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிஷ்செக் நகருக்குச் செல்லும் போது, பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க, இந்திய அரசாங்கம் சார்பில் அனுமதி கோரப்பட்டபோது, பாகிஸ்தானும் அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையிலேயே, பிரதமர் நரேந்திர மோடி பயணிப்பற்கும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரியொருவர், இந்தியாவுடன் நல்லுறவைப் பேணவே, பாகிஸ்தான் விரும்புவதாகவும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
6 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago