2025 நவம்பர் 05, புதன்கிழமை

’பாகிஸ்தானுக்கு ஆதரவாக ராகுல் குரல்’

Editorial   / 2019 மே 06 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நீக்க வேண்டுமென, பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் குரல் எழுப்புவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

பிகார் மாநிலம், வால்மீகி நகர் மக்களவைத் தொகுதியில், நேற்று முன்தினம் (04) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தன் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் முயன்றபோதும் அதில் தோல்வியைச் சந்தித்ததாகவும் இந்நிலையில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றஞ்சுமத்துகின்றனர் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கத்துக்காக, பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை நீக்குவோமென, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருவது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இவர்கள் மக்களின் சேவகர்களாக தங்களை நினைக்கவில்லை என்றும் மாறாக ஜனநாயகத்தின் ராஜாக்களாகவே நினைத்துக்கொள்கின்றனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X