2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தான் ஊடாக உக்ரைனுக்கு உதவும் பிரித்தானியா

Freelancer   / 2022 ஒக்டோபர் 19 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளகப் பிரச்சனைகள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் இருந்தபோதிலும் உக்ரைனுக்கு மிகப்பெரிய இராணுவ நன்கொடையை பிரித்தானியா வழங்கி வருவதாகவும் கிட்டத்தட்ட 

மூன்று பில்லியன் டொலர்களை ஏற்கெனவே வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

உக்ரேனிய மோதல் தொடர்பாக முன்னர் நடுநிலைமையை வெளிப்படுத்திய பாகிஸ்தான், பிரித்தானியாவின் திட்டங்களில் இரகசியமாக பங்களித்து வருவதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சைப்ரஸ் மற்றும் ருமேனியா மூலம் உக்ரைனுக்கு இராணுவ உதவியை அனுப்ப பிரித்தாகியாவுக்கு பாகிஸ்தான் உதவுகிறது என்று அவை தெரிவிக்கின்றன.

பாக். இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்துடன் உக்ரைனுக்கான பாகிஸ்தானின் இரகசிய இராணுவ உதவி பற்றிய அறிவிப்பு மேலும் ஒத்துப்போயுள்ளது.

நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் தனது பிரச்சினையை தீர்க்க பிரித்தானியா, அமெரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிவற்றிடம் ஜெனரல் உதவி கேட்டுள்ளார்.

இதன் விளைவாக, மத்திய தரைக் கடலில் உள்ள பிரித்தானிய விமானத் தளம் வழியாக ரோமானிய சர்வதேச விமான நிலையமான அவ்ராம் இயன்குவுக்கு இராணுவ விமானப் பயணங்களுக்கான மேற்குப் பகுதியின் பாலமாக பாகிஸ்தான் ஏர் என்று அழைக்கப்படும்  ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் விமான தளமான நூர் கான் பயன்படுத்தப்படுகிறது. 

உக்ரேனிய பீரங்கி வீரர்கள் பயன்படுத்தும் பாகிஸ்தானின் 122 மில்லி மீற்றர் எச்.ஈ பீரங்கி ஏவுகணைகளின் பயன்பாட்டைக் காட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் உள்ளன.  

உக்ரேனிய இராணுவத்துக்கு பீரங்கி வெடிமருந்துகளை அனுப்புவதற்காக பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் கனரக இராணுவ போக்குவரத்து விமானம் C-17A குளோப் மாஸ்டர் III இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது. 

ருமேனிய விமான நிலையத்தில் இராணுவ விமானங்கள் சராசரியாக ஒன்றரை மணி நேரமும், சைப்ரஸில் மூன்று முதல் நான்கு மணி நேரமும், பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் 12-20 மணிநேரமும் செலவழித்ததாக கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகள் பயன்படுத்தப்படலாம் என்றும் நம்பப்படுகிறது.

எவ்வாறாயினும், உக்ரைன் கடந்த காலங்களில் பாகிஸ்தானுடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளதால், இது இந்தியாவுடனான அதன் உறவுகளில் பல முறை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

UK RAF C-17 பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கானின் விமானப்படைத் தளத்திலிருந்து ருமேனியா அல்லது சைப்ரஸ் வழியாக உக்ரைனுக்கு ஓகஸ்ட் 6 முதல் தினமும் இரண்டு முறை புறப்பட்டுச் சென்றுள்ளது.

இதை கனடாவைச் சேர்ந்த எலிசபெத் கோசெலின்-மாலோ என்ற ஊடகவியலாளர் ஓகஸ்ட் 17 முதல் டுவீட் செய்து வருகிறார். அதன்படி, விநியோகிக்கப்பட்டவை 122 மி.மீ பீரங்கி ஏவுகணைகள் என்று ஓகஸ்ட் 31 அன்று அவரது ட்வீட் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
 
உக்ரைனுக்கு இரகசிய விமானப் பாதை மூலம் இராணுவ உதவி வழங்கும் பிரித்தானிய திட்டங்களில் பாகிஸ்தானின் இரகசியப் பங்கேற்பை இது மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. 

பாக் இராணுவ வீரர்கள் மேற்கத்திய இராணுவ அகாடமிகளில் பயிற்சி பெறுகின்றமை மூலம்
பாக். இராணுவம் ரஷ்யாவைக் கண்டித்து மேற்கு நாடுகளுக்கு ஆதரவளிக்கக்கூடும் என்பது
தெளிவாகத் தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X