Editorial / 2018 ஜூன் 28 , பி.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது சொந்த தொகுதியில் தேர்தலில் போட்டியிடுவதற்கு, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஷகிட் கஹான் அப்பாஸியை, பாகிஸ்தானிய தேர்தல் தீர்ப்பாயமொன்று நேற்று முன்தினம் தகுதியில்லாததாக்கியுள்ளது.
அந்தவகையில், பாகிஸ்தானின் இன்னொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சிக்கு குறித்த விடயம் இன்னொரு அடியாக அமைந்துள்ளது.
எவ்வாறாயினும், அடுத்த மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில், முரீ தேர்தல் தொகுதியில் அப்பாஸி போட்டியிடுவது மட்டுமே தடை செய்யப்படுவதுடன், அவர் பிறிதாகப் போட்டியில் இஸ்லாமபாத் தொகுதியில் போட்டியிடுவது தடைசெய்யப்படவில்லை. எனினும், வாக்களிப்புக்கு இன்னும் நான்கு வாரங்களே இருக்கின்ற நிலையில், அப்பாஸி புதிய சவால்களை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேர்தலில் போட்டியிடுவதற்கான பெயரிடப்பட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் அங்கத்தவரொருவர் மோசடிக்கெதிரான நிறுவகத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே அப்பாஸியின் குறித்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
தனது வேட்பு மனுப் பத்திரங்களில், தனது சொத்துகளின் உண்மையான பெறுமதியை அப்பாஸி பிரகடனப்படுத்தவில்லையெனக் கூறியே அப்பாஸி குறித்த தொகுதியில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணைக்குழு தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது. எனினும் குறித்த குற்றச்சாட்டை மறுத்த அப்பாஸி குறித்த தீர்ப்பு சட்ட ரீதியற்றது எனக் கூறியதுடன் இதற்கெதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார்.
நவாஸ் ஷரீப்பை பிரதமர் பதவியிலிருந்து உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு நீக்கியிருந்த நிலையிலேயே அப்பாஸி பிரதமராக பெயரிடப்பட்டிருந்தார். இரண்டு தடவைகள் பிரதமராகக் கடமையாற்றிய நவாஸ் ஷரீப் இரண்டு தடவையும் பதவிக்காலத்தின் இடைநடுவே பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago