2025 மே 16, வெள்ளிக்கிழமை

பாக். முன்னாள் இராணுவ வீரர் இங்கிலாந்தில் கைது

Editorial   / 2023 ஜூன் 19 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக ஊடக ஆர்வலரும் யூடியூபருமான மேஜர் (ஓய்வு) ஆதில் ராஜா, பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத செயல்களை ஊக்குவிப்பதாக சந்தேகத்தின் பேரில் இங்கிலாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் பொலிஸ் பிணையில்விடுவிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.

 இங்கிலாந்து அதிகாரிகளிடம் பாகிஸ்தான் அரசு தாக்கல் செய்த புகார்கள் தொடர்பாக ஆதில் ராஜா தனது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணைக்குப் பின் அவர் விடுவிக்கப்பட்டார். விசாரணை தொடர்கிறது என்றும், இந்த கட்டத்தில் எந்த விவரமும் வெளியிடப்படாது என்றும் பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில், அவருக்கு எதிராக தீவிர பயங்கரவாதம் தொடர்பான பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. அவரை பொலிஸார் கைது செய்தது.

ஆதில் ராஜா கைது செய்யப்பட்ட விதம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வரும். அவர் பயங்கரவாதத்தில் குற்றவாளி என்று அர்த்தம் இல்லை, ஆனால் இதன் பொருள் இங்கிலாந்து அவர்கள் (பாகிஸ்தானில் இருந்து) பெற்ற தகவல்கள் மற்றும் உளவுத்துறையின் அடிப்படையில் ஆதில் ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .