2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பாதாள உலகக் குழு உறுப்பினர்களை நாடு கடத்த நடவடிக்கை

Freelancer   / 2022 செப்டெம்பர் 17 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டிலுள்ள பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் 13 பேரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு தேடப்படும் குற்றவாளிகள் 13 பேரும் டுபாயில் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை மீண்டும் விசாரணைக்கு கொண்டு வருவதற்கு தேவையான ஒப்படைப்பு சட்டங்கள் பயன்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இவர்களில் ஹரக் கட்டா, கணேமுல்லே சஞ்சீவ, குடு தர்மே போன்ற பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர்களும் அவர்களது கூட்டாளிகளும் அடங்குவர்.

ஒப்படைப்பு ஆவணங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.(R)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .