Editorial / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாக்டியா மாகாணத்திலுள்ள சுகர்மாத் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், தலீபான் பயங்கரவாதத் தலைவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். அத்துடன், மேலும் 11 பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலின் போது பலியாகியுள்ளனர்.
குறித்தப் பகுதியில், பங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்தப் பகுதியை, பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்திருந்தனர்.
இதன்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக, தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது, குறித்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். அத்துடன், குறித்த பகுதியில் இருந்து, துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்களை, பாதுகாப்புப் படை வீரர்கள் மீட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில், கடந்த 18 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர, தலீபான் பயங்கரவாதிகள் அமைப்புடன், அரசாங்கம் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுத்து வருகின்றது. எனினும், அங்கு பயங்கரவாதத் தாக்குதல்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இராணுவ வீரர்களும் அதற்கு தக்க பதலடி கொடுத்து வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago