2025 நவம்பர் 05, புதன்கிழமை

பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு

Editorial   / 2019 ஜூன் 27 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரதீய ஜனதாக் கட்சியை வீழ்த்த (பா.ஜ.க) வீழ்த்த, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போராட வேண்டும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவின் அசுர வளர்ச்சி மம்தாவை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அரசாங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு வரும் இந்நிலையில், ​நேற்று (26) சட்டமன்றத்தில் பேசிய மம்தா பானர்ஜி, இந்தியாவின் அரசியல் சாசனத்தை ,பா.ஜ.க மாற்றி அமைத்துவிடும் என்ற அச்சம் தனக்கு உண்டு என்றும் காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, பா.ஜ.கவுக்கு எதிராக போராட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மம்தா பானர்ஜியின் அழைப்புக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவிக்கவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X