Editorial / 2019 செப்டெம்பர் 25 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிகில் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற கல்லூரிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த விஷயத்தில் நடிகர் விஜய்க்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா, அண்மையில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவில் விஜய் பேசியது ஆளுங்கட்சியை விமர்சனம் செய்யும் வகையில் அமைந்திருந்தது.
இந்நிலையில், பிகில் இசை வெளியிட்டு விழா நடைபெற்ற கல்லூரிக்கு உயர்கல்வித்துறை அழைப்பாணை அனுப்பி உள்ளது. அதில், பிகில் பட இசை விழா நடத்த எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் நடிகர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் சபை ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் சபை தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நடிகர் விஜய்யின் பிகில் திரைப்பட ஒலிநாடா வெளியீட்டு விழாவுக்கு அனுமதி வழங்கியதுக்காக சாய்ராம் பொறியியல் கல்லூரி நிர்வாகத்துக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் அழைப்பாணை அனுப்பியிருந்தார். அதில், கல்லூரி வளாகத்தில் அரசியல் நிகழ்ச்சிகள் நடப்பதற்கு அனுமதி அளித்தது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், இந்நிகழ்ச்சி கல்லூரி வளாகத்துக்குகு வெளியே அமைக்கப்பட்ட அரங்கத்தில் தான் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் இது ஒரு அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும்.
பிகில் திரைப்பட ஒலி நாடா வெளியீட்டு விழாவில் விஜய் உரையாற்றியதில் சில கருத்துக்கள் ஆளுங்கட்சியினருக்கு எதிராக கூறியதாக தவறாக புரிந்துகொண்டு இத்தகைய நடவடிக்கைகளில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஏவி விடப்பட்டிருக்கிறது.
நடிகர் விஜய் பொதுவாக பேசியதை அ.தி.மு.கவினருக்கு எதிராக பேசியதாக அமைச்சர் ஜெயக்குமார் புரிந்துகொண்டிருக்கிறார். விஜய் அரசியல் பேசியதற்காக கல்லூரி நிர்வாகம் அச்சுறுத்தலுக்கு இரையாக்கப்பட்டிருக்கிறது.
எனவே, கல்லூரிக்கு தரப்பட்ட அழைப்பாணையை உயர்கல்வித்துறை திரும்ப பெற வேண்டும். திரும்ப பெறாவிட்டால் கடும் விளைவுகளை ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும்” என்று கூறியுள்ளார்.
28 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago