2025 மே 15, வியாழக்கிழமை

பிஞ்சு கன்னத்தை பதம்பார்த்த தந்தை

Freelancer   / 2023 ஜூலை 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பச்சிளம் குழந்தையை தந்தையே கண்மூடித்தனமாக அடித்து வீடியோ எடுத்து வெளியிட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது.

குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த டெங் என்பவர் சென் என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியிருக்கிறார். இவர்களுக்கு குழந்தை பிறந்த சிறிது காலத்தில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்தப் பெண் பிரிந்து சென்றுள்ளார். குழந்தையை டெங் வசம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில், டெங் தனது கைக்குழந்தையின் முகத்தில் சுமார் 30 வினாடிகள், 30 முறை அறைந்து, அந்த செயலை படம்பிடித்து தனது காதலிக்கு அனுப்பியுள்ளார்.

இணையத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், வலியால் குழந்தை அழுதபோதும், முகம் சிவந்து வீங்கும் வரை டெங் அறைந்து கொண்டே இருக்கிறார். இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த பலர், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .