Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவின் பழமைவாதக் கட்சியின் தலமைத்துவத்துக்கான போட்டியில் இன்று (23) வென்றதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தத்துடனோ அல்லது ஒப்பந்தமில்லாமலோ பிரித்தானியாவை இவ்வாண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி விலத்துவதாக உறுதியளித்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஆதரவான பொரிஸ் ஜோன்சன், பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மேயை பிரதமராக பிரதியிடவுள்ளார்.
பழமைவாதக் கட்சியின் தனது போட்டியாளரான வெளியுறவுத்துறை செயலாளர் ஜெரெமி ஹண்டின் 46,656 வாக்குகளுக்கெதிராக 92,153 அங்கத்தவர்களின் வாக்குகளை முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரான பொரிஸ் ஜோன்சன் வென்றிருந்தார்.
இந்நிலையில், எலிஸபெத் மகாராணியை சந்திப்பதற்காக பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் சென்ற பின்னர் இன்று பிரதமர் தெரேசா மே பதவி விலகவுள்ள நிலையில், பிரித்தானியத் தலைநகர் இலண்டனின் முன்னாள் மேயரான பொரிஸ் ஜோன்சனை உத்தியோகபூர்வமாக பிரதமராக எலிஸபத் மகாராணி நியமிப்பார்.
அந்தவகையில், பிரித்தானியாவின் பிரபல்யமிக்க அரசியல்வாதிகளிலொருவரான 55 வயதான பொரிஸ் ஜோன்சனுக்கு குறித்த முடிவானது அபாரமான வெற்றியாக நோக்கப்படுவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு 2016ஆம் ஆண்டு பிரித்தானியா வாக்களித்த பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு ஆதரவான ஒருவர் முதற்தடவையாக பிரதமராகும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
17 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago