Editorial / 2019 மே 02 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் ரஞ்சன் கொகொய் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்திய பெண்ணொருவர், தான் நீதியை எதிர்பார்க்காததால், குறித்த வழக்கை விசாரணை செய்யும் நீதியரசர்கள் குழாமின் விசாரணையில் பங்கேற்கப்போவதில்லை என நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் கொகொய்க்கெதிரான தனது குற்றச்சாட்டுகளை விவரிக்கும் ஆவணங்களுடன் அனைத்து உச்ச நீதிமன்ற நீதியரசர்களுக்கும், அடையாளம் பொதுவில் வெளிப்படுதப்படாத 35 வயதான நீதிமன்ற கனிஷ்ட உதவியாளர் கடிதமொன்றை எழுதியிருந்தார்.
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை ரஞ்சன் கொகொய் மறுத்திருந்தார்.
இச்சந்தர்ப்பத்திலேயே, ரஞ்சன் கொகொய் மீது தான் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து தானும், தனது குடும்பமும் பழிவாங்கப்படுவதாக குறித்த பெண் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.
இதுதவிர, நேற்று முன்தினம் அறிக்கையொன்றை விடுத்த குறித்த பெண், தனது பிரதிநிதியின் பிரசன்னத்தைக் கொண்டிருக்க தான் அனுமதியளிக்கப்படவில்லை என்று கூறியதுடன், எந்தவொரு காணொளி, ஒலிப்பதிவோ மேற்கொள்ளப்படவில்லையென்றும், தனது வாக்குமூலத்தின் பிரதியொன்று முன்னைய நாட்களில் வழங்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக உடனடியாக கருத்தெதனையும் பெற இந்திய உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்க முடியவில்லை.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago