Ilango Bharathy / 2022 மார்ச் 06 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இதனால், பல நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு அளித்து வந்த சேவைகளை நிறுத்தி வருகிறது.

இந்நிலையில் உக்ரைனை தாக்கும் ரஷ்யாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டில் தங்கள் சேவைகளை நிறுத்தி வைப்பதாகவும், ரஷ்யாவில் வழங்கப்பட்ட அட்டைகள் வெளிநாட்டில் செயற்படாது எனவும் சர்வதேச பணப்பரிவர்த்தனை நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்ட் ஆகியவை தெரிவித்துள்ளன.
இந்நிலையில் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளின் அறிவிப்பால் தங்கள் நாடு அரசு வங்கியின் வாடிக்கையாளர் சேவைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
54 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
6 hours ago
09 May 2026