2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பிரித்தானிய அரச குடும்பம் எடுத்த அதிரடி முடிவு; அதிர்ச்சியில் பிரித்தானியா

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 21 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியினர் தங்களது  மகளான  இளவரசி சார்லோடை (Charlotte)  பொதுமக்கள் போல் வேலைக்குச் செல்லும் நபராக இருக்கத் தயார் படுத்துவதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்  ”தற்போது ஏழு வயதாகும் சார்லோட்டை தனித்துவமாக வளர்க்க தாம் விரும்புவதாகவும், அரச குடும்பத்தில் பணியாற்றும் ஒருவராக அல்லாமல் நிறுவனம் ஒன்றில் தமது கல்விக்கு தகுந்த வேலைக்கு தேடிக்கொள்ளும் ஒருவராக இருக்கவே  அவரைத் தயார் படுத்தி வருவதாகவும் கேட்-வில்லியம் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

சார்லோட் முழுநேர ராஜ குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினராக இல்லாமல் வேலைக்கு செல்லும் நபராக மாறுவார் என்றால் அவர் கண்டிப்பாக அரச குடும்பத்தின் தனிப்பட்ட விதிகளை மீற தயாராக வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X