2025 மே 08, வியாழக்கிழமை

பிரி. பாராளுமன்ற தேர்தல் இன்று

Freelancer   / 2024 ஜூலை 04 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய பராளுமன்றத்திற்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டின் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது.

இந்நிலையில் அந்நாட்டு பாராளுமன்ற பொதுத் தேர்தல் முன்கூட்டியே ஜூலை 04ஆம் திகதி நடைபெறும் எனவும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாகவும் கடந்த மே 30ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மொத்தமுள்ள 650 உறுப்பினர்களை கொண்ட பிரி.பாராளுமன்றத்துக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் மற்றொரு கட்சியான தொழிலாளர் கட்சியும் வலுவாக உள்ளதால் ஆட்சியை கைப்பற்ற வெற்றி வியூகம் வகுத்து வருகிறது என அந்நாட்டு ஊடகங்கள் கருத்துவெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X