2025 நவம்பர் 05, புதன்கிழமை

பிரெக்சிற்றில் மே தோல்வியடைந்ததில் வெற்றி பெற எதிர்பார்க்கும் மேயின் பிரதியீட்டாளர்கள்

Editorial   / 2019 மே 27 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதில் வெற்றியடைவதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை வெளியேற்றுவதாகவும் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயின் பிரதியீட்டாளர்களாக வருபவர்கள் என எதிர்பார்க்கப்படுவோர் உறுதியளித்துள்ள நிலையில், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராவதற்கான போட்டி ஆரம்பித்துள்ளது.

எவ்வாறெனினும், தாம் ஏற்கெனவே இறுதிச் சலுகையை அளித்து விட்டதாக ஐரோப்பியத் தலைவர்கள் வலியுறுத்துகின்ற நிலையில், இவ்வாண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி, ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான வாய்ப்புகளே அதிகமாகக் காணப்படுகின்றன.

ஏனெனில், பிரதமர் தெரேசா மேயின் பழமைவாதக் கட்சியின் தலைவராக வரக்கூடியவர்களில் தற்போது முன்னிலையிலுள்ளவர்களின் பிரதான அக்கறையாக, எந்த விதத்திலும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை வெளியேற்றுவதாகவே உள்ளது.

ஒப்பந்தத்துடனோ அல்லது ஒப்பந்தமில்லாமலோ ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு இவ்வாண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி பிரித்தானியா வெளியேறும் என சுவிற்ஸர்லாந்தில் வைத்து, பிரதமர் தெரேசா மேயை பிரதியிடக்கூடியவர்களில் முன்னிலையில் இருப்பவராகக் கருதப்படும் பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரான பொரிஸ் ஜோன்சன் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பொரிஸ் ஜோன்சனின் பிரதான போட்டியாளர்களாகக் கருத்தப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான முன்னாள் செயலாளர் டொமினிக் றாப், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெரெமி ஹன்ட் ஆகியோர் தாமும் பழமைவாதக் கட்சியின் தலைமைத்துவதுக்கு போட்டியிடப்போவதாக நேற்றைய பத்திரிகைகளில் பிரகடனப்படுத்தியிருந்தனர். இதில், பொரிஸ் ஜோன்சனை விட ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான கொள்கையைக் கொண்டவராக டொமினிக் றாப் கருத்திற் கொள்ளப்படுகின்றார்.

இதேவேளை, பழமைவாதக் கட்சியின் தலைமைத்துவத்துக்காக போட்டியிடப் போவதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்னாள் தலைவர் அன்ட்றியா லீட்சம், சுகாதாரச் செயலாளர் மைக்கல் கோவ் ஆகியோரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X