Editorial / 2018 டிசெம்பர் 10 , மு.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான உடன்படிக்கை குறித்த ஐ.இராச்சிய நாடாளுமன்ற வாக்கெடுப்பு, தள்ளிவைக்கப்படும் எனத் தெரிகிறது. இவ்வாக்கெடுப்பு, நாளை (11) இடம்பெறவிருந்த நிலையில், இதை ஒத்திவைப்பது தொடர்பில், பிரதமர் தெரேசா மே ஆராய்ந்து வருகிறார் என, ஐ.இராச்சியத்தின் த சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஐ.இராச்சிய நாடாளுமன்றத்தால் அங்கிகரிக்கப்பட வேண்டியுள்ளது. எனினும், நாடாளுமன்றத்தில் மிகச்சிறிய பெரும்பான்மையையே கொண்டுள்ள பிரதமர் மே, இதை நிறைவேற்றுவதற்குக் கடுமையான சவாலை எதிர்கொள்கிறார்.
இது தொடர்பான விவாதம் இடம்பெற்றுவரும் நிலையில், விவாதத்தின் முதல்நாளிலேயே, இரண்டு தடவைகள் அவருக்குத் தோல்வி ஏற்பட்டிருந்தது. இதனால், நாளை இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைவார் என, பரவலாகவே எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர்களையும் உதவியாளர்களையும் மேற்கோள்காட்டிச் செய்தி வெளியிட்டுள்ள த சண்டே டைம்ஸ், இத்தோல்வியின் அளவு, மிக மோசமாக இருக்குமென அஞ்சுவதாலேயே, வாக்கெடுப்பைத் தள்ளிப் போடுவதற்கு, பிரதமர் மே தீர்மானித்துள்ளார் எனக் குறிப்பிட்டது.
எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பு, பிரதமரின் தரப்பிலிருந்து இன்னமும் வெளியாகியிருக்கவில்லை.
38 minute ago
40 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
40 minute ago
55 minute ago
2 hours ago