2025 மே 17, சனிக்கிழமை

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 17 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிலிப்பைன்ஸின் நேற்றைய தினம் 6.1  ரிச்சட் அளவில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று  ஏற்பட்டுள்ளது.

மாஸ்பேட் தீவில் உள்ள மியாகா என்ற இடத்தில் 11 கி.மீற்றர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பல இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

துருக்கியில் கடந்த வாரம் ஏற்பட்ட 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இதுவரை 41,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .