Shanmugan Murugavel / 2026 ஜனவரி 26 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென் பிலிப்பைன்ஸ் மாகாணமான பஸிலானில் 359 பேருடன் ஓடமொன்று மூழ்கியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் சுலுவிலுள்ள ஜோலோ தீவு நோக்கி ஸம்பொங்கா துறைமுக நகரிலிருந்து பயணிகள் கப்பலானது சென்று கொண்டிருக்கும்போதே இன்று நள்ளிரவுக்குப் பின்னர் விபத்து இடம்பெற்றுள்ளது.
புறப்பட்டு நான்கு மணித்தியாலங்களில் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு 11.40க்கு அபாய சமிக்ஞயை கப்பல் அனுப்பியதாக பிலிப்பைன்ஸ் கரையோரக் காவற்படை தெரிவித்துள்ளது.
பலுக்-பலுக் கிராமத்திலிருந்து ஒரு கடல் மைல் தூரத்தில் நல்ல வானிலையிலேயே ஓடம் மூழ்கியதாக கரையோர காவற்படை குறிப்பிட்டுள்ளது.
குறைந்தது 316 பேர் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளதாகவும், 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேரை இன்னும் காணவில்லையென தென் மின்டானோ மாவட்டத்தின் கரையோர காவற்படையின் தளபதி றொமெல் டுவா தெரிவித்துள்ளார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago