Editorial / 2018 நவம்பர் 01 , மு.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட திடீர் மண்சரிவு காரணமாக, நிலத்துக்குள் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படும், குறைந்தது 30 பேரை மீட்பதற்கான முயற்சிகளில், அந்நாட்டின் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடுமையான மழை காரணமாக, பிலிப்பைன்ஸின் வட பிராந்தியத்தில், இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம், மண்சரிவு ஆகியன காரணமாக, வீதிகள் தாழிறங்கி, அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதுடன், இதுவரையில் ஏழு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதேபோல், கடுமையான காற்று வீசியதெனவும் அறிவிக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில், மணிக்கு 230 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசி, பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்தது.
43 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago
4 hours ago