2025 நவம்பர் 05, புதன்கிழமை

பீகாரில் கடத்தப்பட்ட சிறுமி திண்டுக்கலில் மீட்பு

Editorial   / 2019 ஜூலை 30 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீகாரில் கடத்தப்பட்ட சிறுமியை , மீட்ட திண்டுக்கல் பொலிஸார் சிறுமியை கடத்திய பெண்ணையும் கைது செய்தனர்.

பீகாரை சேர்ந்த 15 வயது சிறுமியை, அதே மாநிலத்தை சேர்ந்த மணிஷா குமாரி என்ற பெண் கடத்தி வந்து, திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி சிப்காட்டில் உள்ள தனியார் மில்லில் அடைத்து வைத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து,  சம்பவ இடத்திற்கு விரைந்த திண்டுக்கல் பொலிஸார் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டு திண்டுக்கல் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

சிறுமி மீட்கப்பட்டது குறித்து, பீகார் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, திண்டுக்கல் வந்த பீகார் பொலிஸார் சிறுமியை அழைத்து சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X