Ilango Bharathy / 2022 டிசெம்பர் 19 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேன் ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கையில் நிறுத்துவதற்கு அமைதி பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக பலமுறை அறிவித்துள்ளது.
ஆனால் அதற்கான முன்னெடுப்புகளில் களமிறங்க உக்ரேன் மறுத்துவிட்டது. அது மட்டுமல்லாமல் ரஷ்ய படைகள் கைப்பற்றி வைத்திருந்த உக்ரேனிய பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றாமல் போர் நடவடிக்கையை உக்ரேன் கைவிடப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளது.
இதனால் உக்ரேன் ரஷ்யா இடையான போர் இன்னும் பல மாதங்கள் தாண்டியும் தொடரும் என இராணுவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எல்.சி.ஐ தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது “ரஷ்ய ஜனாதிபதி புடினின் முகத்தில் நான் குத்த தயாராக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். அதற்கான முதல் வாய்ப்பு நாளைய நாளாக இருந்தாலும் கூட நான் தயாராக இருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025