Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2022 ஏப்ரல் 08 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேன் மீது ரஷ்யா 40 நாட்களுக்கும் மோலாகத் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா, ஜி 7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை புதிய தடைகளை அறிவித்துள்ளன.
குறிப்பாக ரஷ்யாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமான ‘ஸ்பர் பேங்க்‘, ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் வங்கி ‘ஆல்பா பேங்க்‘ ஆகியவற்றின் மீதும் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால் ரஷ்யாவில் புதிய முதலீடுகள் நிறுத்தப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடினின் மகள்களான மரியா புதினா, மற்றும் கேட்டரினா டிக்கோனோவா ஆகியோரைக் குறிவைத்துப் புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ரஷ்ய பிரதமர் மிகைல் மிசுஷ்டின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் மனைவி, குழந்தைகள், முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் உள்ளிட்ட பாதுகாப்பு சபை உறுப்பினர்களும் அமெரிக்காவின் தடை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .